'செல்பி' : நல்லதும் கெட்டதும்!

செல்பிக்களை எடுப்பதும் பகிர்வதும் நன்று!:


'செல்பி' எனப்படும், தற்படங்களை எடுப்பதும், அவற்றை சமூக வலை தளங்கள் மூலம் நண்பர்களுடன் பகிர்வதும் ஒருவரது மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பதாக, 'சைக்காலஜி ஆப் வெல்பீயிங்' என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கணினி அறிவியல் துறையை சேர்ந்த விஞ்ஞானிகள், 41 மாணவர்களை ஒரு மாதகாலம் தற்படங்களை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இவர்களின் ஒரு பிரிவினர் தினமும் சிரித்தபடி உள்ள தற்படங்களை எடுத்தனர். ஒரு பிரிவினர் தங்களுக்கு மகிழ்ச்சி தரும் எதையாவது படம் எடுத்தனர். கடைசி பிரிவினர், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்று தாங்கள் நினைத்ததை படமெடுத்து அந்த 
நபருடன் பகிர்ந்து கொண்டனர். “நாங்கள் கேட்டுக்கொண்ட மொபைல் பயிற்சிகளை செய்த மூன்று குழுவினரும் அந்த மாதம் முழுவதும் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அதிகரித்ததாக தெரிவித்தனர்” என்கிறார், இந்த ஆய்வுக் குழுவின் தலைவரான யூ சென்.புதிய தொழில்நுட்பங்கள் மக்களை மனச்சோர்வுக்கு ஆளாக்குவதாக பரவலாக இருக்கும் கருத்துக்கு மாறாக, இந்த ஆய்வு முடிவு இருப்பதை சென் சுட்டிக் காட்டுகிறார்.


அடுத்தவர் செல்பிக்களை பார்ப்பது நன்றன்று!



சமூக வலை தளங்களில், மற்றவர்கள் பதிவிடும், 'செல்பி' எனப்படும் தற்படங்களை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு, சுய மதிப்பும், வாழ்க்கையில் நிறைவும் குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இணையத்தில் நிலைத் தகவல்கள், புகைப்படங்களை பதிவிடுவோரின் மனநிலையையே ஆராய்ச்சியாளர்கள் அதிகம் ஆராய்ந்துள்ளனர். ஆனால், சமீபத்தில், 'ஜர்னல் ஆப் டெலிமேடிக்ஸ் அண்ட் இன்பார்மேடிக்ஸ்' இதழில் வெளியான தங்களது ஆய்வு, 'பதிவுகளை, புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனநிலையை ஆராய்கிறது' என்கிறார் அமெரிக்காவின், 'பென் ஸ்டேட்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ருவோக்சு வாங். சமூக தளங்களில் இடப்படும் தற்படங்களும், 'குரூப்பி' எனப்படும் குழுப்படங்களும், உணவகம், சுற்றுலாத் தலம், ஷாப்பிங் மால் போன்றவற்றில் இருப்பதை காட்டுகின்றன. அல்லது புதிய உடை, சிகையலங்காரம், ஏன் நகப் பூச்சு போன்றவற்றையும் வெளியிடுகின்றனர்.
தினமும் மற்றவர்களின் தற்படங்களைப் பார்ப்பவர்களுக்கு, தன் வாழ்க்கை, அவர்களுடையதைப் போல சுவாரசியமாக இல்லை என்ற எண்ணம் எழும். இது அவர்களது சுயமதிப்பை பாதிக்கிறது. இணையம் மூலம் சில நுாறு பேரிடம் ஆய்வு நடத்திய வாங், 'இத்தகயை உணர்வு இருப்பவர்கள், மற்றவர்களது தற்படம் அல்லது குழுப்படங்களை தினமும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்' என்கிறார்.

Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter