நீங்கள் எப்பேற்பட்டவர் என்பதை இந்த 6 விஷயங்களைக் கொண்டே சொல்ல முடியும் என்பது தெரியுமா?



முதன் முறையாக ஒருவரை சந்திக்கும் போது, அவர் எப்பேற்பட்டவர் என்பதை முன்பே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். சிலர் ஒருவருடன் பேசும் முன்பே அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பார்கள். அது எப்படி என்று தெரியுமா? அதற்கு அவர்களின் ஒருசில நடவடிக்கைகள் அல்லது செயல்கள் தான் காரணம்

ஒருவரின் சிறிய நடவடிக்கைகளைக் கொண்டே அவர் எந்த மாதிரியான குணத்தைக் கணிக்க முடியும். இங்கு அது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், அந்த நடவடிக்கைகள் சாதாரணமாகத் தான் தெரியும். இருப்பினும் அதுவே அவர்களது பெர்சனாலிட்டியை வெளிப்படுத்தும். சரி, இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!
கையெழுத்து

ஆம், கையெழுத்திலேயே கொண்டே ஒருவரின் பெர்சனாலிட்டி தெரியும். அதுவும் அவர்கள் எழுதும் விதம் மற்றும் எழுத்துக்களின் அளவைக் கொண்டு சொல்ல முடியும் என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிறிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்களாம். அதுவே பெரிய கையெழுத்துக்களை கொண்டவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்களாம். மேலும் யார் ஒருவர் எழுதும் போது அதிக அழுத்தத்தைக் கொடுத்து எழுதுகிறார்களோ, அவர்கள் எதிலும் மிகுந்த அக்கறையுடனும், அழுத்தம் கொடுக்காமல் லேசாக எழுதுபவர்கள் ஒற்றுணர்வு உள்ளவர்களாகவும், மிகவும் சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பார்கள்.
நிறம்

அடிக்கடி தேர்ந்தெடுத்து அணியும் உடையின் நிறத்தைக் கொண்டும், ஒருவரைப் பற்றி சொல்ல முடியும். அதில் யார் அதிகமாக கருப்பைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மிகவும் சென்டிவ்வானவர்கள் மற்றும் எதிலும் அக்கறையுடன் செயல்படுவார்கள். சிவப்பு நிற உடைகளை அணிபவர்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்வார்கள் மற்றும் பிடிவாத குணமுள்ளவர்கள், எடுத்த காரியத்தை முடிப்பதில் தீர்மானமாக இருப்பார்கள். அதுவே பச்சை நிறம் விசுவாசத்தையும், பாசத்தையும் குறிக்கும். நீலம் நிலைமாறாத் தன்மை, சென்சிடிவ் மற்றும் மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.
 
நகங்களைக் கடிப்பது

ஒரு சூழ்நிலையைக் கையாளும் போது நம் உடல் ஒருசில செயல்களை தானாக செய்யும். அதாவது முடியை சுழற்றுவது அல்லது நகங்களைக் கடிப்பது போன்றவை. இச்செயல்களை பொறுமையின்மை, விரக்தி, சலிப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும். அதிலும் நகங்களைக் கடிப்பவர்கள் பரிபூரணத்துவ குணத்துடன் இருக்க விரும்புவார்கள், அதே சமயம் அதிகமாக பதற்றமாவார்கள்.

நேரந்தவறாமை

ஒருவரின் நேரந்தவறாமை குணம் அவரைப் பற்றி கணிக்க உதவும். உதாரணமாக, ஒருவரை சந்திக்க அல்லது இன்டெர்வியூவிற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றால், அது நம்மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். அதுவே தாமதமாக சென்றால், அது அவர்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

கை குலுக்குவது

ஒருவரை சந்திக்கும் போது வணக்கும் சொல்லும் ஓர் முறையான கை குலுக்குவதைக் கொண்டும் அவரது குணத்தைக் கணிக்க முடியும். அதில் ஒருவர் உறுதியுடன் கைகளை இறுக்கமாக குலுக்கினால், அவர் தன்னம்பிக்கை குணமிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதைக் குறிக்கும். அதுவே கை குலுக்கும் போது தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், குறுக்கு வழியில் இலக்குகளை அடைவார்கள் என்பதையும் வெளிக்காட்டும்.

கண்கள்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் குணங்கள் என பல விஷயங்களைச் சொல்லும். கருப்பு நிற கண்களைக் கொண்டவர்களை விட, நீல நிற கண்கள் உள்ளவர்கள், எதையும் அவ்வளவு எதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் பெரும் குடிகார்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. அதுமட்டுமின்றி ஒருவருடன் பேசும் போது அவர்களது கண்களைப் பார்த்து பேசாமல் எங்கேயோ பார்த்து பேசினால், அது அவர்களுக்கு சுய-கட்டுப்பாடு குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்



Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter