மேலோக கடவுள்கள் ஐ.டி லோகத்தில் பணிபுரிந்திருந்தால்??? – ஓர் சிறிய கற்பனை!
மேலோகத்தில் ஜாலியாக இருக்கும் கடவுள்களை எல்லாம், பூலகதிற்கு வரவழைத்து ஐ.டி என்பது சொகுசான வேலையில்லை. பணம் கிடைக்கும் அளவிற்கு இங்கு தான் மன அழுத்தமும், சோர்வும் நிறைய கிடைக்கிறது என்று கூறி, அவரவருக்கு ஏற்ற வேலைகள் கொடுத்து பணியில் அமர்த்தினால், யார் யாருக்கு என்ன பொறுப்பு, வேலைகள் கொடுக்கப் பட்டிருக்கும்?
நாம் பார்த்த வரை பிரம்மா படைப்பவர், விஷ்ணு ஆட்டிப்படைக்கும் கடவுள், சிவன் ஆக்கம், அழிப்பு என இரண்டையும் கண்காணிப்பவர், இவர்களை தவிர, கணேஷன், நாரதர், பார்வதி, லக்ஷிமி, சரஸ்வதி என நிறைய பேர் இருக்கிறார்கள். மேலோகத்தில் இவர்கள் செய்யும் வேலைகளுக்கு இணையாக ஐ.டி-யில் என வேலை கிடைக்கும் என்ற ஓர் சிறிய கற்பனையை இனி பார்க்கலாம்…
பிரம்மா
மனிதர்களுக்கு உயிர், உருவம் கொடுத்து உலகத்திற்கு அனுப்பும் இவருக்கு System Installer பதவி கொடுக்கப்பட்டிருக்கும்.
விஷ்ணு
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு System Operator வேலை கொடுக்கப்பட்டிருக்கும். எந்த பிரச்சனை என்றாலும் பாவம் இவர் தலை தான் உருளும்.
சிவன்
ஆக்கும், அழிக்கும் சக்தி கொண்ட சிவனுக்கு System Programmer வேலை கொடுத்து இருப்பார்கள். யார், யார் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி செயல்கள் நடக்க வேண்டும் என்ற முழு கண்காணிப்பும் இவரது கைகளில் தான் இருந்திருக்கும்.
நாரதர்
அங்கு நடக்கும் செயல்களை இங்கும், இங்கு நடக்கும் செயல்களை இங்கும் கூறி கலகம் செய்யும் நாரதருக்கு Data Transmitter-ஆக இருந்திருப்பார்.
எம தர்ம ராஜன்
மனிதர்கள் மீது பாசக்கயிறு வீசி, உயிரை பறிக்கும் தொழிலை கொண்ட எமனுக்கு, Deletor பொறுப்பு வாய்க்கப்பட்டிருக்கும்.
அப்சரா மற்றும் ரம்பை
தேவலோக அழகிகளான இவர்கள் தான் வைரஸாக இருந்திருப்பார்கள். அவரவர் ஒழுங்காக வேலைப் பார்த்தாலும் தேவையில்லாமல் இடையில் புகுந்து ஆட்டத்தை கலைப்பதே இவர்கள்.
விநாயகர்
அனைவரும் விரும்பும் செல்ல கடவுளான பேச்சுலர் விநாயகர் ஆன்டி-வைரஸாக இருந்திருப்பார்.
அனுமன்
மலையை தூக்கி சென்ற இவர் ஈமெயில் தூக்கி செல்வது ஒன்றும் பெரிய கடினமான வேலையாக இருக்காது. அனுமன் ஒருவேளை ஈமெயில் அனுப்புவாராக இருந்திருக்கலாம்.
சித்திரகுப்தன்
அனைவரின் பாவப் புண்ணிய கணக்கை கண்காணிக்கும் சித்திரகுப்தன் ஹார்ட்டிஸ்க்காக இருந்திருக்கலாம்.
சரஸ்வதி
கல்வி அருளை அள்ளி அருளும் கடவுளான சரஸ்வதி ப்ரௌசராக இருந்திருப்பார். சொன்னாலும், சொல்லாவிட்டாலும், இன்று படிக்கும் மாணவர்கள் முதல், வேலை செய்யும் ஊழியர்கள் வரை ப்ரௌசரை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
பார்வதி
சிவனின் சக்தியாய் இருக்கும் பார்வதி ப்ரோக்ராம் செயல்ப்பட முக்கிய காரணமான Mother Board-ஆக தானே இருக்க முடியும்.
லக்ஷிமி
நாம் இவ்வளவும் செய்வது எதற்காக, மாதம் பிறந்தால் கிடைக்கும் சம்பளத்திற்காக தான். கிரெடிட் ஆன சம்பளத்தை எடுக்க உதவும் ATM எனும் பொறுப்பில் லக்ஷிமி இருந்திருப்பார்
Comments
Post a Comment