காதுக்கேற்பஉருமாறும் 'இயர்போன்!' ( A Ear phone Can change the size by itself Based on the Ear)



காதுக்கேற்பஉருமாறும் 'இயர்போன்!'

மொபைல் போன் அழைப்பு வந்ததும், காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு, 'ம்... சொல்லுங்க' என்பதற்குள் சனியன், கழண்டு விழுந்து தொலைக்கிறது' என்ற சலிப்பு எல்லாருக்கும் உண்டு. இதற்கு காரணம், கைரேகை போலவே, ஒவ்வொருவரது காதின் உள்பகுதியும் வடிவமைப்பில் வேறுபட்டது என்பதுதான். இதை புரிந்து கொண்டிருக்கிறது, 'ரிவோல்ஸ்!' சிலிகோன் ஜெல் நுனிகளைக் கொண்ட ரிவோல்ஸ் இயர் போனை, காதில் மாட்டிக்கொண்டதும், அதை மொபைல் போனில் இருக்கும் செயலி கதகதப்பூட்டுகிறது.
இதனால், 60 வினாடிகளுக்குள் உங்கள் காதின் வடிவத்துக்கு ஏற்றபடி, கனகச்சிதமாக தன்னை தகவமைத்துக் கொள்கிறது இயர்போன். அதுமட்டுமல்ல, சில இயர் போன்களை அணிந்தால் சுற்றுப்புற சத்தத்தை கேட்க முடியாது; அல்லது சுற்றுப்புற சத்தம் இயர் போனில் வரும் ஒலியை கேட்கவே விடாது. இதையும் ரிவோல்ஸ் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். வெளியில் நடந்துபோகும் போது, வெளிப்புற சத்தம் எந்த அளவுக்கு கேட்கலாம் என்பதை, நீங்களே தீர்மானிக்கலாம். தனிமையில் முழுக்க முழுக்க இசையில் மூழ்க வேண்டும் என்றாலும், அதற்கும் ரிவோல்ஸ் செயலி வசதி செய்து தருகிறது.வரும், 2016ன் முற்பகுதியில், சந்தைக்கு வரவிருக்கும் ரிவோல்சின் விலை தான், கைக்கும், காதுக்கும் எட்ட முடியாத அளவுக்கு இருக்கிறது; 20 ஆயிரம் ரூபாய்!
 

Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter