மகாமகம் புனித நீராடல் - The Hindu Spiritual Festival

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 13ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை மகாமகத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் மனிதநேயத்தை வளர்க்கும் மகாமக பெருவிழா கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மடாதிபதிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின், கலெக்டர் சுப்பையன் கூறுகையில், ‘ மகாமகம்  சிறப்பாக நடைபெற இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த விழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 22ம் தேதி புனிதநீராடல் நடக்கிறது. புனிதநீராடல் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டும் கருத்துக்களை இங்குள்ள ஆதீனங்கள், மடாதிபதிகள் கூறவுள்ளனர். தேவையான வசதிகளை செய்துள்ளதால் பக்தர்களை வரவேற்க அரசு தயார் நிலையில் உள்ளது’ என்றார்.

திருப்பனந்தாள் காசித்திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமி: மகாமக பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் விழா. வடக்கே நடைபெறும் கும்பமேளா புண்ணிய நதிகளில் நடக்கிறது. சுமார் 5 கி.மீ தூரம் உள்ள அந்த நதிகளில் ஒரே நேரத்தில் நீராட முடியும். ஆனால் இங்கு திருக்குளத்தில் நடக்கிறது. வரும் 13ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இந்த 10 நாட்களில் எப்போது வேண்டுமானாலும்  குளிக்கலாம்.


தருமபுர ஆதீன தென்மண்டல கட்டளை  விசாரணை  குமாரசுவாமி  தம்பிரான்: மேளா என்றால் சேர்தல் என்று பொருள். தை அமாவாசை துவங்கி மாசி அமாவாசை வரை இந்த விழாவுக்கு பலன் உண்டு. 10 நாட்களில் எந்த நாட்களில் குளித்தாலும் புண்ணியம் கிடைக்கும். மகாமக நேரத்தின்போது அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இங்கு வருகிறது. எனவே கடல் நீராடுதல், காவிரி நீராடுதல் என்று எல்லா நதிகளும் வருகிறது. சங்க இலக்கியத்தில் எல்லா தீர்த்தமும் கொண்ட குடந்தை கீழ்க்கோட்டம் என கூறப்பட்டிருக்கிறது. தீர்த்தமாடுவது பாவத்தை நீக்கி மோட்சத்துக்கு அழைத்து செல்வது என்று அர்த்தம். வரும் 13ம் தேதி குளத்தில் புனித நீராடலை தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் துவக்கி வைக்கிறார்.

திருவாவடுதுறை சுந்தரமூர்த்தி சுவாமி தம்பிரான்: மகாமகத்துக்கு தேவையான பணிகளை முன்னதாகவே திட்டமிட்டு செய்து வருவது பாராட்டுக்குரியது. மகாமக பெருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் பயனடைய வேண்டும் என்றார்.


Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter