‘மரணம்’ பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்! ( What Will Happen After Death ??)



உங்கள் வாழ்க்கையில் ஓர் தீராத பயம் என்றால் அது என்ன என்று கேட்டால், அதற்கு நிச்சயம் மரணம் தான் பதிலாக இருக்கும். ஏனெனில் நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் மரணம் நிச்சயம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிகழும். வாழ்வில் ஏற்படும் ஓர் மாற்றத்தை தவிர்க்க முடியாது என்றால் அது மரணமாகத் தான் இருக்கும். சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட மரணத்தைப் பற்றிய திடுக்கிட வைக்கும் சில உண்மைகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துப் பாருங்கள். மேலும் நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா?? 

உண்மை 1

இடக்கை பழக்கம் உள்ளவர்கள், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட 3 வருடம் முன்பே மரணத்தை சந்திப்பார்களாம்.

உண்மை 2

இறந்த சடலங்களை நான்கு நாட்கள் கழித்துப் பார்த்தால் வீங்கி காணப்படும். அது ஏன் என்று தெரியுமா? ஏனென்றால், உடலில் உள்ள வாயுக்கள் மற்றும் நீர்மங்கள் தன்னழிவு மூலம் வெளியேற்றப்படுவதால் தான்.

உண்மை 3

மனிதன் வயதாவதால் இறப்பதில்லை, வயதாகும் போது உடலைத் தாக்கும் நோய்களால் தான் மரணிக்கப்படுகிறான்.

உண்மை 4

தடயவியல் விஞ்ஞானிகளால் இறந்த சடலத்தின் மீதுள்ள உயிரினங்களைக் கொண்டே, இறந்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்பதை சொல்ல முடியும்.

உண்மை 5

ஒரு மனித தலை துண்டிக்கப்பட்ட பின்னர் சுமார் 20 நொடிகள் நனவுடன் இருக்கும்.

உண்மை 6

உலகில் பெரும்பாலான மக்களின் இறப்பிற்கு காரணமாக இருப்பது இதய நோய், விபத்துக்கள் அல்லது பிரசவம்.

உண்மை 7

இதய துடிப்பு நின்ற சில நிமிடங்களிலேயே மூளைச் செல்களும் இறந்துவிடும். ஆனால் நம் சரும செல்கள் 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.



Comments

Post a Comment

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter