மாறும் உலக முகவரி !!! ( World Address Is Going to be Change) (W3W)



உலகின் எந்த மூலைக்கும், மூன்று வார்த்தை முகவரிகள் தரமுடியும் என்பது, 'வாட் 3 வேர்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் வாதம்.
வாதம் மட்டுமல்ல, யாரையும் கேட்காமல் அவர்களே உலகின் மூலை முடுக்குகளை எல்லாம், 3 சதுர மீட்டர்களாக பிரித்து, அவற்றுக்கு அவர்களாகவே, மூன்று ஆங்கில வார்த்தைகளை முகவரிகளாக தந்தும் விட்டனர். இம்மாம் பெரிய உலகத்தை, 57 ட்ரில்லியன் கட்டங்களுக்குள் அடக்க முடிந்திருக்கிறது அவர்களால். உலகின் பல பகுதிகளுக்கு சரியான முகவரிகளை தருவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பின் கோடு போன்ற எண் முறைகளை, பலரால் நினைவில் கொள்ள முடிவதில்லை. இதனால், உலகை, 3 சதுர மீட்டர் கட்டங்களாக பிரித்து, ஒரு கட்டத்திற்கே உரித்தான மூன்று ஆங்கில சொற்களை முகவரியாக ஒதுக்குவது, பல வகைகளில் சிறந்தது என்கிறது, வாட் 3 வேர்ட்ஸ் நிறுவனம். ஒருவர் இருக்கும் இடத்தை காட்டும் ஜி.பி.எஸ்., வசதியும், இணைய வசதியும் இன்று அதிதிறன் மொபைல் போன்களில் பரவலாக கிடைப்பதால், வாட் 3 வேர்ட்ஸ்
சொல்வது நடைமுறைக்கு ஒத்து வருவது போலத்தான் தெரிகிறது. அண்ணா சாலை என்ற கி.மீ., கணக்கில் நீளும் சாலையில், ஒருவர் எங்கே நிற்கிறார் என்பதை திசை, தெரு, சந்து போன்றவற்றை கடாசிவிட்டு, tடிணதூ.ஞ்ணூச்tடிtதஞீஞு.tதணூடுஞுதூ என்று அடையாளம் சொன்னால் போதும்.
உடனே வாட் 3 வேர்ட்ஸ் வரைபடத்தில் அது தாராபூர் டவர்ஸ், கட்டடத்தின் அண்ணா சாலையைப் பார்த்த வாசல் பகுதி என்பதை மிகத் துல்லியமாக உங்களால் தெரிந்து கொள்ள முடியும். பேரிடர் காலங்களில் நிவாரண உதவி, மருத்துவ உதவியைத் தரவும், தூதஞ்சல் சேவை, வாடகை வாகன சேவை, ரியல் எஸ்டேட் என்று பல துறைகளுக்கும் இந்த மூன்று வார்த்தை முகவரி முறை உதவும்.


Share it this Information If you like this!!!!! 

                        (((( Friendship Are going to stop, When you you Stop Sharing!!! ))))

Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter