கொசுவால் உருவாகும் ஜிகா வைரசை கொசுவாலேயே அழிக்கலாம்
பிரேசிலியா: உலக நாடுகளை ஜிகா வைரஸ் பயமுறுத்தி வருகிறது. இந்நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறக்கும். இதையடுத்து பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.தென் அமொிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உள்பட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் இதுவரை 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 15 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வாகனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்களில் கொசுக்களை அடைத்து பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அவற்றை திறந்து விடுகின்றனர். இந்த கொசுக்கள் சாதாரண கொசுக்கள் போன்றவை இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆய்வகங்களில் பெருக்கம் செய்யப்பட்டவை ஆகும். இந்த கொசுக்கள் பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்தாலும், முட்டையில் இருந்து வெளிவரும், இளம் கொசுக்கள் பறக்கும் தன்மை வருவதற்குள் இறந்துவிடும். இதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் பெருமளவில் குறையும்.
மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள், ஜிகா வைரசை பரப்பக்கூடிய, கொசு இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்களுடன் மட்டும்தான் இணை சேரும். இதனால் விரைவில் நோய் பரப்பும் கொசு இனம் அழிவுக்கு வரும். இப்போதைக்கு, ஜிகா வைரசுக்கு தடுப்பு மருந்து இல்லாத நிலையில், வித்தியாசமான இந்த அணுகுமுறை பலனளிக்கும் என்று பிரேசில் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
super....
ReplyDelete