உலகிலேயே முதன்முறையாக ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: ஹைதராபாத் மருந்து உற்பத்தி நிறுவனம் தகவல்
உலகிலேயே முதன்முறையாக, ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை
கண்டுபிடித்திருப் பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாரத் பயோ டெக் இன்டர்நேஷனல் நிறுவனத் தின் தலைவர் மற்றும்
நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா ஹைதராபாத்தில் செய்தியாளர் களிடம் நேற்று
கூறியதாவது:
தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா நாடுகளில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது.
குறிப்பாக பிரேசிலில் அதிக அளவாக 3,530 பேர் இந்த நோயால் பாதிக்கப்
பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜிகா
வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளின் தலை சிறுத்து
காணப்பட்டதாகக் கூறப் படுகிறது.
ஜிகா வைரஸ் உலகம் முழு வதும் 40 லட்சம் பேரைத் தாக்கும் ஆபத்து உள்ளதாக
எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம், சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து
உள்ளது. இதனிடையே உலக நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான
ஆராய்ச் சியில் தீவிரம் காட்டி வரு கின்றன.
உலகிலேயே மிகச்சிறந்த விஞ்ஞானிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் எங்களது நிறு
வனம், ஜிகா வைரஸ் காய்ச்சலுக் கான தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்கான
ஆராய்ச்சியை ஓராண்டுக்கு முன்பே தொடங் கியது.
மொத்தம் இரண்டு வகையான மருந்துகளை தயாரித்து வரு கிறோம். அதில் ஒன்று
செயலிழக் கச் செய்யும் தடுப்பு மருந்து. முன் மருத்துவ நிலையை எட்டி உள்ள
இது விலங்குகளுக்கு பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
‘ஜிகாவக்’ என்ற இந்த மருந் துக்கு சர்வதேச காப்புரிமை கோரி உலகிலேயே
முதன்முறையாக நாங்கள்தான் விண்ணப்பம் செய் தோம். விரைவில் இந்த மருந்து
உலகுக்கு அறிமுகம் செய்யப் படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்
துறை இயக்குநர் டாக்டர் சுமதி கூறும்போது, “பிரேசி லில் பாதிப்பு
ஏற்படுவதற்கு முன்பே ஜிகா வைரஸ் தடுப்பு மருந்தை நாங்கள் கண்டுபிடித்து
விட்டோம். ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிக அளவில் தாக்குவதால், கருவில் உள்ள
குழந்தையின் பாதுகாப்பு கருதி மிகுந்த கவனமுடன் தடுப்பு மருந்தை
கண்டுபிடித்துள்ளோம்” என்றார்.
ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது. தேங்கி நிற்கும் நீரின்
மூலம் பல்கிப் பெருகும் இந்த வகை கொசுக்கள், பகலில் மனிதர்களைக் கடிக்
கின்றன. இந்த கொசுக்கள் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் வெஸ்ட் நைல்
வைரஸ் ஆகிய காய்ச்சலுக்கும் காரணமாக அமைகின்றன.
Comments
Post a Comment