பீகாரில் வினோத சம்பவம்:அடிபம்பில் குளித்ததால் தலைமுடியை இழந்த குடும்பம்!!

பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் வீட்டின் அருகே அடிபம்பில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்ததால் தங்கள் தலைமுடியை இழந்துள்ளனர்.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் முகமது ஹஸிம், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் வழக்கம் போல் தங்களது தெருவில் உள்ள ஒரு அடிபம்பில் தண்ணீர் எடுத்து வந்து குளித்தனர்.

குளித்த சில மணி நேரத்தில் தலையில் பெரும் அரிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து முடிகள் கொத்து கொத்தாக கொட்ட துவங்கியது. வீட்டில் உள்ள 2 பெண்கள் சிறுவன் உட்பட 4 பேரின் தலைகளில் இருந்து முடி கொட்டி முழுவதும் மொட்டை அடித்தது போல மாறிவிட்டது.

இது குறித்து மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டது. இந்த தகவல் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர்.

அடிபம்பு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. இந்த அடிபம்பில் இருந்து கிராம மக்கள் யாரும் தண்ணீர் எடுக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு அடிபம்பு போட்டு கொடுக்க மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter