வாடவே வாடாத பூ! ( Is This Possible ?? )
உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் பூக்களுக்குத் தனி இடம் உண்டு. என்னதான்
பேரழகு என்றாலும் பூக்களுக்கு ஒரே ஒரு நாள்தான் ஆயுள். பூக்கள் மட்டும் பல
மாதங்களுக்கு வாடாமல் உயிர் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? இந்தப் பேராசையை
அறிவியல்பூர்வமாக அமெரிக்காவில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஹெய்னாவ் என்ற பெயரில் ஒரு நிறுவனம்
உள்ளது. இங்கே ஆண்டு முழுவதும் வாடாத பூக்களை உற்பத்தி செய்கிறார்கள்.
இவற்றை பிளாஸ்டிக் பூக்கள் அல்லது பேப்பர் பூக்கள் என்று நினைத்துவிட
வேண்டாம். நிஜப் பூக்களைத்தான் தயாரிக்கிறார்கள். இந்தப் பூக்கள் ஓராண்டு
வரையிலும்கூட வாடாமல் இருக்கின்றன.
இந்த வாடாத பூக்களை எப்படித்
தயாரிக்கிறார்கள்?
விசேஷமாக எதையும் கொண்டு இந்தப் பூக்களைத் தயாரிப்பதில்லை. வழக்கமாகத்
தோட்டங்களிலிருந்துதான் பறிக்கிறார்கள். பின்னர், அந்தப் பூக்களில் உள்ள
ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு, வாடாத தன்மையைக் கொடுக்கும் ஒரு
வேதிப்பொருளை அதற்குள் செலுத்துகிறார்கள். அந்த வேதிப்பொருள்தான் பூக்களை
வாசனையாகவும் மலர்ச்சியுடனும் வைத்துக்கொள்கிறது. இந்தப் பூ ஒன்றின் விலை
15 டாலர் (ஒரு டாலர் = 68 ரூபாய்) முதல் 545 டாலர்வரை விற்கப்படுகிறது.
:-) nice !!!!
ReplyDelete