46 ஆண்டுகளாக 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது பெரிசு : ராஜஸ்தானில் ருசிகர சம்பவம் !!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 46 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது மாணவர் இந்த ஆண்டும் 47வது முறையாக தேர்வு எழுதுகிறார். ராஜஸ்தானில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன. அங்கு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் கூட, மறு ஆண்டில் மீண்டும் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் பாஸ் ஆக முடியும். இந்த சூழலில் கடந்த 46 ஆண்டுகளாக ஷிவ் சரன் யாதவ் என்பவர் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி எழுதி தோல்வியை சந்தித்து வந்துள்ளார்.

இருந்த போதும் சற்றும் மனச்சோர்வு அடையாமல் 10ம் வகுப்பு மாணவனைப் போலவே சுறுசுறுப்புடன் இந்த ஆண்டும் 47வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வை வருகிற 10ம் தேதி எழுத தயாராகி வருகிறார். தற்போது 77 வயதை எட்டியுள்ள போதிலும் 17 வயது மாணவனைப் போல தேர்வில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக படிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1968ம் ஆண்டு நான் முதன்முறையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதினேன். அந்த வருடம் பெயிலானேன். பின்னர் மறுபடி மறுபடி தேர்வு எழுதிய போது ஏதேனும் இரண்டு பாடங்களிலோ, ஒரு பாடத்திலோ தோல்வி அடையும்படி ஆகி விட்டது.

இதனால் விடா முயற்சியுடன் எப்படியும் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வருகிறேன். இதற்காக ஆசிரியர்கள் சிலரிடம் சென்று டியூசனும் எடுத்துக் கொண்டேன். எப்படியும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் தனிமையில் வாழும் இந்த பெரியவர். தனது பரம்பரை வீட்டில் தனியாக வசித்து வரும் ஷிவ் சரண் யாதவ் அரசு அளி்க்கும் முதியோர் பென்ஷனை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இருந்த போதிலும் தள்ளாத வயதிலும் தளராத முயற்சியுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Post a Comment

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter