இந்திய ரயில்வே இணையதளத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் ஹேக் செய்ததால் பரபரப்பு!!!

புதுடெல்லி: அல் கொய்தா தீவிரவாத அமைப்பினர் இந்திய ரயில்வே இணையதளத்தை ஹேக் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹேக் செய்த பின்னர் அதில் சில தகவல்களை தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய ரெயில்வேயின் பணியாளர் துறை  பக்கத்தில் தெற்கு ஆசியாவின் அல் கொய்தா தலைவர் மவுலானா அசிம் உமர் பெயரில் இதியாவில் உள்ள அனைத்து முஸ்லிகளுக்கனாக செய்தி என்று கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், உங்கள் கடலில் மட்டும் ஏன் எந்த புயலும் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஷா முஹட்டித் தேஹ்ல்வி டெல்லி தேசத்தில் பிறந்தவராக  இருக்கலாம் ஆனால் அதற்காக நீங்கள் ஜிகாத்தை மறக்ககூடாது என்று தெரிவித்துள்ளார். ஜிகாத்தை மறந்த இந்திய முஸ்லீம்களுக்கு மீண்டும் கற்றுகொடுத்து  அவர்களை போர்க்களங்களில்  ஊக்குவிக்க மாட்டீர்களா என்றும் கேட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை தோற்கடிக்க ஜிகாத் போரில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த உமர் என்பவரை இந்திய துணை கண்டம் அல் கொய்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter