பிளிப்கார்ட்டில் வேலைக்கு சேர தன்னையே விற்பதாக ஐஐடி மாணவன் அறிவிப்பு !!

புதுடெல்லி: கரக்பூர் ஐஐடி மாணவர் ஒருவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்காக வினோதமான முறையை பின்பற்றியுள்ளார்.  அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னையே விற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் உள்ள  ஐஐடியில் படித்தவர் ஆகாஷ் நீரஜ் மிட்டல். இவர் இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் உற்பத்தி மேலாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தார்.  பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததால் சுமார் 5 வினாடிகளில் ஒரு விண்ணப்பத்தை பார்த்துவிட்டு ஒதுக்கிவிடுவார்கள் என்பதை ஆகாஷ் நீரஜ் மிட்டல்  உணர்ந்தார். இதனால் தேர்வு செய்பவர்கள் தனது விண்ணப்பத்தை முழுமையாக படிக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னை விற்பனை செய்வது போன்ற பாணியில் தனது விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பியுள்ளார். விண்ணப்பத்தில்  அவர் கூறியிருப்பதாவது: ‘‘நாட்டில் உள்ள மிகவும் மேன்மை தங்கியவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவேலையில் நிலைத்து நிற்பது என்பது  எவ்வளவு கடினம் என்பது தெரியும். சில வேடிக்கையான விஷயங்களை செய்யத் தொடங்க வேண்டும். கூட்டத்தில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும்.  இதுதான் என்னுடைய விண்ணப்பம்” இவ்வாறு தெரிவித்து இருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஆகாஷ் நீரஜ் மிட்டலுக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து  அழைப்பு ஏதும் வரவில்லை.


Comments

Popular posts from this blog

The World First Banking Robot In Chennai # Interesting One !!!

Funny Maths Quiz.. Operation Surya Hope details

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது ! #FacebookDataCenter