அணுகுண்டு வீசி அமெரிக்காவை சாம்பலாக்குவோம்: வடகொரியா எச்சரிக்கை !!
அமெரிக்கா, தென்கொரியா மீது அணுகுண்டுகளை வீசி இருநாடு களையும் சாம்பலாக்கிவிடுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் அணுஆயுதங்
களைச் சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையும்
நடத்தியது.
இதை கண்டித்து ஐ.நா. சபை சார்பில் வடகொரியா மீது கடுமை யான பொருளாதாரத்
தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வடகொரியா- தென் கொரியா எல்லைப்
பகுதியில் அமெரிக்கா, தென்கொரிய ராணுவம் இணைந்து போர்ப் பயிற்சியை
தொடங்கியுள்ளன. இதில் சுமார் 17 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் 3 லட்சம்
தென்கொரிய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த
நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளி
யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
வடகொரியாவின் இறையாண் மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்
அமெரிக்காவும் தென்கொரியாவும் போர்ப் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளன. இரு
நாடுகள் மீதும் அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம். நாங்கள்
அணுஆயுதங்களை ஏவினால் அமெரிக்காவும் தென்கொரியாவும் சாம்பலாகிவிடும்.
இவ்வாறு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, வட கொரியாவின் அணுஆயுத
தளங் களைக் குறிவைத்தே இப்போது போர்ப் பயிற்சி நடத்தி வருகிறோம், எத்தகைய
சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளன.
இதனிடையே ஜப்பான் வெளி யுறவு அமைச்சர் புமியோ கிஷிதா கூறியபோது,
வடகொரியாவின் அணுஆயுதங்களைப் பயன்படுத் தக்கூடாது, அந்த நாடு பொறுமை காக்க
வண்டும். இதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப் பைக் கோருகிறோம் என்று
தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment