அடுத்த முறை பேட்டரி சார்ஜ் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !!!
ஸ்மார்ட்போன் முதல் அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த பாகம் அதன் பேட்டரி தான் எனலாம். பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை சரியாக பின்பற்றினாலே பேட்டரியை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் பேட்டரிகளை சரியாக பராமரிக்கவில்லை எனில், அவை நமக்கு சாதகமாக வேலை செய்யாமல் போகும். இங்கு உங்களின் மின்சாதன பேட்டரிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி அவற்றின் வாழ்நாளை நீட்டிக்க நீங்கள் செய்யக் கூடாத பிழைகள் என்னென்ன என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்..,
பேட்டரி சார்ஜிங் முறை:
பெரும்பாலானோர் தங்களது பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் அவற்றை மீண்டும் சார்ஜ் செய்வர். ஆனால் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை. பொதுவாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் தீர்ந்த பின் சார்ஜிங் செய்ய பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் 400-600 முறை வரை திறன் வழங்கப்பட்டிருக்கும்.
பேட்டரி பேக்கப் நீட்டிக்க:
அடுத்த முறை உங்களது பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அவற்றை சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப்பில் நல்ல பலன்கள் கிடைக்கும். இதனால் பேட்டரி அளவு 10 - 20% வரை இருக்கும் போது அவற்றை மீண்டும் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது முழுமையாக சார்ஜ் ஆகும் பேட்டரி திறன் அளவு 1000 முதல் 1100 வரை அதிகரிக்கும்.
சார்ஜிங் கேபிள்:
இன்று வெளியாகும் நவீன சார்ஜர்கள் சாதனம் முழுமையாக சார்ஜ் ஆன பின்னரும் சார்ஜரிலேயே போடப்பட்டிருந்தால் எவ்வித பாதிப்பையும் பேட்டரியில் ஏற்படுத்தாது. சார்ஜரில் பொறுத்தப்பட்டிருக்கும் கண்ட்ரோலர் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆன பின் மின்சார பரிமாற்றத்தை நிறுத்தும் திறன் கொண்டுள்ளது. இதனால் சாதனம் எவ்வளவு நேரம் சார்ஜரில் இருந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
Comments
Post a Comment