Tamil Funny Story - Don't think you are always Smart
ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் “
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”
மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் “
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!
கதையின் நீதி :
எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ………
Comments
Post a Comment